அற்றஹூமான்

அல்லாஹ்வின்_அழகிய_பெயர்கள் …

1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
3. அல் மலிக் = மன்னன்.
4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.
7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.
9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.
10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
11. அல் காலிக் = படைப்பவன்.
12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.
13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.
14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.
16. அல் வஹ்ஹாப் = பெருங்கொடையாளன்.
17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதி அளிப்பவன்.
18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.
19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
21. அல் பாஸித் = தாராளமாகக் கொடுப்பவன்.
22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.
23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
24. அல் முஇஸ் = மேன்மை அடையச் செய்வோன்.
25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.
26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.
28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
29. அல் அதல் = நீதி செய்வோன்.
30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.
31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.
32. அல் ஹலீம் = அமைதியானவன்.
33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.
34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
36. அல் அலிய் = உன்னதமானவன்.
37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.
38. அல் க(K)பீர் = பெரியவன்.
39. அல் முகீத் = பழிப்பவன்.
40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.
43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
45. அல் வாஸிஃ = எங்கும் நிலவுகிறவன்.
46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.
49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.
50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
51. அல் ஹக் = சத்தியமானவன்.
52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
54. அல் மத்தீன் = உறுதியானவன்.
55. அல் வலீ = கிருபை செய்பவன்.
56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
57. அல முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்.
58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக் கொள்பவன்.
59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
60. அல் முப்திஃ = ஆதியில் வெளியிடுபவன்.
61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.
62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.
64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.
65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்.
66. அல் வாஹித் = தனித்தவன்.
67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.
68. அல் ஸமத் = தேவையற்றவன்.
69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.
70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச் செய்பவன்.
71. அல் முகத்திம் = முன்னேறச் செய்பவன்.
72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.
73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
74. அல் ஆகிர் = இறுதியானவன்.
75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.
76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.
77. அல் வாலி = அதிகாரப் பொறுப்புள்ளவன்.
78. அல் முத்த ஆலி = உயர் பதவியுள்ளவன்.
79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளை மீட்பவன்.
81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.
82. அல் அஃபூ = சகிப்பவன்.
83. அல் ரவூஃப் = இரக்கச் சிந்தனையுள்ளவன்.
84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்கு உரியவன்.
85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும், சிறப்பும் உள்ளவன்.
86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.
88. அல் கனீ = தேவையற்றவன்.
89. அல் முக்னீ = தேவையற்றவனாக ஆக்குவோன்.
90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.
91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
93. அல் நூர் = ஒளி தருபவன்.
94. அல் ஹா தீ = நேர்வழி செலுத்துவோன்.
95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.
96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.
97. அல் வாரித் = உரிமையாளன்.
98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்.
99. அல் ஸபூர் = பொறுமையாளன்.

பெண்களுக்கு கத்னா..!!

தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

விருத்த சேதனம் அல்லது அரபி மொழியில் ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் இஸ்லாத்தில் ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்ட விடயமாகும் பொதுவாக இன்று இஸ்லாமிய சமூகத்தில் ஒருவரை முஸ்லிம் என அடையாளப்படுத்த இதை ஒரு சான்றாக கூட கொள்வர் .ஹத்னா என்றழைக்கப்படும் விடயம் . நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் சட்டமாக்கிய அம்சம் அல்ல மாறாக பல முன் சென்ற நபி மார்களுக்கும் இதை சட்டமாக வகுத்துக் கொடுத்துள்ளான் .இதனால்தான் தொறாத் மற்றும் கிருஸ்தவ வேதங்களில் இன்று கூட இதன் சட்ட அம்சங்களை நாம் காணக் கூடியதாக உள்ளது . இந்தவகையில் பைபளின் புதிய ஏற்பாட்டில் ( லூக்கா 2:21) (யோவான் 7:220 ,(ரோமர் 2:26) போன்ற பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளது.மேலும் பல பகுதிகளிலும் இதை நாம் காணலாம் .

அதே போல் இந்த விடயம் உலக அளவில் இன்று மட்டுமல்ல பன்னெடுங் காலமாக பல்வேறுபட்ட சமூகங்களில் வழக்கத்தில் காணக் கூடியதாக உள்ளது . பல வரலாறுகளில் கிறிஸ்துவுக்கு முன் 2300 ஆண்டுகளுக்கு முன் இவை சமூகங்களில் இருந்தும் வந்துள்ளது . மேலும் இன்று கூட ஹிப்ரு பைபிள் என்று அழைக்கப்படும் யூதர்களின் மத நூற்களிலும் இவை சொல்லப் பட்டிருப்பதை காணலாம். அதே போன்று இன்று மருத்துவ உலகில் பொதுவாக அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாக இது காணப்படுகின்றது . இதனால்தான் ஹத்னா தொடர்பான இஸ்லாமிய வியாக்கியானங்களுக்கு அப்பாலும் பலஅந்நிய சமூகங்களில் இதனை ஒரு சமூக செயற்பாடாக செய்து கொண்டு வருகின்றனர்.

இதே போன்று ஒன்றுதான் பெண்களுக்கு செய்யப்படும் விருத்தசேதனம் ஆகும். இதுவும் பொதுவாக வரலாறுகளில் பன்னெடுங் காலமாக செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஓன்று Female Genital Mutilation (FGM) என்றழைக்கப்படும் பெண்களுக்கு செய்யப்படும் இந்த விருத்த சேதனம் எனும் விடயம் ஆண்களுக்கு செய்யப்படும் நியாய பூர்வ தன்மையில் இருந்து வேறுபட்டு இயற்கைக்கு மாற்றமான முறையில் பெண்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. இது உலக அளவில் பார்க்கும் போது பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யும் வழக்கு ஆபிரிக்க நாடுகளில் இன்று கூட மிகவும் பிரபலமானவை . அங்கு பல சமூகங்களில் இம்முறைமை நடை முறையில் உள்ளது. மேலும் புராதன எகிப்தில் இது நாட்டு சட்டமாக வரலாற்றில் இருந்து வந்துள்ளது .
மேலும் அரபு நாடுகளில் மத்திய கிழக்கில் கூட இது வளக்கத்தில் இருந்து வந்துள்ளது . எனவே இந்த பெண்கள் விருத்த சேதனம் என்பது உலகில் இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்தே பல சமூகங்களில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது .
பிரச்சினை இதுதான் இஸ்லாத்தில் இது சட்டமாக்கப் பட்டுள்ளதா ? என்பதுதான். .இதற்கு இஸ்லாமிய வழியில் பதில் சொல்வதானால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை . ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இது வழக்கத்தில் உள்ள படியால் சற்று விரிவாக ஆராயலாம் என்று நினைகின்றேன் .பொதுவாக ஆண்களுக்கு ஹத்னா செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது .இஸ்லாம் சட்டமாக்கிய பல விடயங்கள் இஸ்லாத்துக்கு முன்னர் சமூக வழக்கங்களில் உள்ளதுதான். உதாரணமாக ஆண்களுக்கு ஹத்னா செய்வது ,பெண்கள் இத்தா இருப்பது,போன்ற பல விடயங்களை குறிப்பிடலாம்
ஆனாலும் இஸ்லாம் அவற்றை ஒழுங்கு படுத்தி எமக்கு தந்துள்ளது. ஆண்களுக்கு ஹத்னா செய்வது கூட நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னர் அப்போது அரேபியாவில் இருந்துள்ளது. ஆனால் அதை இஸ்லாம் எமக்கு சட்டமாக வகுத்து தந்துள்ளது . அப்போது சமூக வழக்கத்தில் இருந்தது என்பதற்காக இஸ்லாம் சட்டமாக ஆக்கவில்லை ,இப்ராஹீமிய சமூகத்தின் சிறப்புக்களின் ஓன்று இது என்பதால் இதை சட்டமாக ஆக்கியுள்ளது இந்தவகையில் பெண்களுக்கு ஹத்னா செய்வது என்பது சமூக வழக்கங்களில் இருந்தாலும் இஸ்லாம் எமக்கு அதை சட்டமாக அருளவில்லை ஏனனில் இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் இது சட்டமாக இருந்ததில்லை .ஆனால் இஸ்லாமிய சமூக அமைப்பில் அதனை சட்டமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
உண்மையில் ஆண்களுக்கு செய்வதை மருத்துவா ரீதியாக எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு செய்வதை மருதுவரீதியாகக் கூட எடுக்க முடியாது .அதற்கு நியாயப்படுத்த எந்தக் காரணத்தையும் கூற முடியாது.சிலர் இஸ்லாத்தில் இது சட்டமாக உள்ளது என்பதற்கு இப்படியான ஒரு காரணத்தையும் கூறுவர் அதற்கு சில நபி மொழிகளையும் ஆதாரமாகவும் காட்டுவர். அதாவது.

“ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : முஸ்லிம் (579)

இங்கு நபி ஸல் அவர்கள் பயன்படுத்தி உள்ள அரபு சொல் ஹிதாநாணி என்பது அதாவது இரண்டு ஹத்னா செய்யப்பட்ட உறுப்பு என்பது பொருள் கொள்கின்றனர். அதாவது அரபியில் ஒரு சொல்லை இவ்வாறு இரண்டு சொல்லாக பயன்படுத்தி வந்தால் எந்த சொல் முதன்மையாக குறிப்பிடுகின்றதோ அதனை அதன் பிரதான கருத்தாக கொள்வர். அல்லது இரண்டு சகோதர சொற்களையும் அதன் கருத்தாக கொள்வர். உதாரணமாக அபவானி என்ற அரபு சொல். அபுன் என்றால் தந்தை எனவே நாம் இதனை இரண்டு தந்தை என்று எடுப்பதில்லை. தந்தை மற்றும் தாய் என்றே எடுக்கின்றோம் .

அதே போன்று நபி (ஸல்) அவர்கள் அஸ்ரைனி இரண்டு அசருகள் என்று சுபஹ் மற்றும் மக்ரிப் தொழுகைகளை குறிப்பிட்டுள்ளனர் .இவ்வாறு பல சொற் பிரயோகங்களை நாம் காணலாம் . இதே போன்று அரேபியர் கமரைனி என்று சூரியன் மற்றும் சந்திரன் இரண்டையும் குறிப்பிட்டுள்ளனர் .இதே பாவனைதான் ஹிதானானி என்று இரண்டு ஹத்னா செய்யப்பட்ட என ஒரு அரபு

துளசி

இறைவனால்_ஆசீர்வதிக்கப்பட்ட
மூலிகை.துளசியும்_சப்ஜா__விதையும்.துளசியில்_அவ்வளவு_மருத்துவ
குணமா ???55:12: وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
தொலியால் மூடப்பட்ட தானியமும் நறுமணமுள்ள செடியும் உள்ளது.
#அல்_குர்ஆன் : 55 : 12முஹமது நபிகள்நாயகம் (ஸல்) கூறினார்கள். உங்களுக்கு துளசி (வாசனை பொருள்) கொடுக்கப்பட்டால் அதை நிராகரிக்க வேண்டாம். ஏனென்றால் அது சொர்க்கத்தில் உள்ளதாகும்.#அறிவிப்பாளர் :
அபூ உஸ்மான் அந்நஹ்தி(ரலி).
#நூல் : திர்மிதி. (2791).முஹமது நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
துளசி (Raihaan) வழங்கப்பட்டால் அதை மறுக்க கூடாது.
ஏனெனில் அது இனிமையான மணம் உள்ளதாகவும் இலகுவானதாகவும் உள்ளது.#அறிவிப்பாளர் :
அபூஹூரைரா(ரலி)
#நூல் :முஸ்லீம் (2253)துளசி இலையும் அதனுடைய விதையும் தேள் கடிக்கு மருந்தாக பயன்படுகிறது.
துளசி செடியின் மனம். மேலும் இதை வாசனைக்காக வீட்டில் பயன்படுத்து கின்றனர். மலக்குமார்களுக்கு (#வானவர்கள்) (ANGELS ) பிடித்தவையாக இருக்கின்றது.
இது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை போக்கவும் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய இருமலை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
மேலும் இது மூக்கு சம்பந்தமாக ஏற்படக்கூடிய அலர்ஜி சிக்கல்களுக்கும் காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் உடலில்
அமிலத்தன்மையை குறைகக்கூடியதாகவும். மூத்திர சூடு மற்றும் சிறு நீர் எரிச்சலை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.#புண்கள்
இதனுடைய விதைகளை அரைத்து புண்களுக்கு பற்றாக இட விரைவில் குணமாகும்.#பாதவெடிப்பு
இதனுடன் ஆலிவ் எண்ணெயும் – ரோஸ் வாட்டரும் கலந்து தோலில் ஏற்படுகின்ற தடிப்புக்கும் மற்றும் வெடிப்புக்கும் பயன்படுகிறது. இது மூலத்தில் ஏற்படுகின்ற எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.#அரிப்பு
துளசி விதையோடு ஆலிவ் எண்ணெய் கலந்து உபயோகிக்க தோலில் ஏற்படக்கூடிய. படை சொறி – உடல் எரிச்சல் – அலர்ஜி – வயிற்றுப்புண#வயிற்றுப்புண்
வயிறுறுப்புண்ணுக்கு ( Ulcer )இது முக்கியமான மருந்தாகும்.
வயிற்று எரிச்சலையும் போக்ககூடியதாகவுள்ளது.#வயிற்றுப்போக்கு
1 ஸ்பூண் இதன் துளசி விதை – 1 ஸ்பூண் தேன் கலந்து குடிக்க வயிற்று போக்கு உடனே நிற்கும்.#கல்லீரல்_சுத்தப்படுத்த
இதை தண்ணீரில் ஊறவைதுது குடித்தால் கல்லீரல் சுத்தப்படும் மற்றும் கல்லீரல் வீக்கம் குறையும்.துளசியோடு தாமரை இலையையும் சேர்த்து சாப்பிட மூலத்தால் ஏற்பட்ட இரத்த போக்கு நிற்கும்.#சிறுநீரகப்பிரச்சனை
துளசி இலையை டீ வைத்து .அதனுடன் தேன் கலந்து கொடுக்க சிறுநீரக பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
சப்ஜா விதைக்கு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் சக்தி இருக்கிறது. வியர்வையாக அது வெளியேறும்.#தலைவலி
அதனால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் அதனை பயன்படுத்தலாம்.
இந்த தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு கைபிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
இது பூச்சிகளை கொல்லும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு ஒரு கைபிடி அளவு இலையை எடுத்து ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தொடர்ந்து பருகிவரவேண்டும்.#காதுவலி
காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.#முகப்பரு
டீன்ஏஜில் பெரும்பாலான பெண்கள் முகப்பருவால் அவதிப்படு கிறார்கள். அவர்கள் இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். தழும்புகளும் மறையும்.சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.#மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும். வெள்ளைப்படுதலுக்கும்.
இது நல்ல மருந்து.
இது உடல் சூட்டை குறைத்து,
உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்…