கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி..!

அருமருந்து


பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு முக்கியமான விதைதான் கருஞ்சீரக விதை. ஆயுர்வேதாயுனானி மற்றும் இன்றைய நவீன மருந்துவகைகளிலும் கருஞ்சீரகம் கலவையாகப் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வளவு சிறப்பும் மறுத்துவக் குணமும் கொண்டதுதான் கருஞ்சீரகம். ஆங்கிளத்தில் Nigella sativa அல்லது Black seed என அழைக்கப்படும் கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பியதெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியாப் பகுதிகளாகும். இந்தியத் துணைக்கண்டத்தின் சில மாநிலங்களிலும் இவை காட்டுச் செடியாக வளர்கின்றன.

கருஞ்சீரகம் பழங்காலம் முதல் வாசனைத் திரவியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பழைமையான ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றியும் அதன் மறுத்துவக் குணங்கள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ளார். சுமார்3,300 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த விதை எகிப்திய மக்களால் பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

கருஞ்சீரகம் செடி வகையைச் சேர்ந்த்தாகும். அழகான தோற்றத்தில் சுமார் 20 முதல் 30 செ.மீ. உயரம்வரை வளரக்கூடியன. அதன் மல்ர்கள்கூட நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மலரின் இதழ்கள் ஐந்து முதல் பத்து வரை வெவ்வேறாகப் பிரிந்து காணப்படும். மலரிலிருந்து உருவாகும் காயின் மேற்பகுதி காய்ந்து பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பு நிறத்திலும் சற்று கடினமானதாக இருக்கும்.



கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான். இது தொடர்பாக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபலமான ஹதீஸை இங்கு நோக்குவோம். கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளதுஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீஇப்னுமாஜா)

மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில் அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக,நோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில் உணவுடன் கருஞ்சீரக விதைகருஞசீரக எண்ணெய் என்பன சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒரு விடயம். அதனால்தான் அரபு மக்கள் இதனை ஹப்பதுல் பரகாஹ் – அருள்பாளிக்கப்பட்ட விதை” என அழைக்கின்றனர்.

           

இவ்விதைகளின் மருத்துவக் குணங்கள் தொடர்பாக உயிரியல் மருத்துவ ரீதியாக (Biomedical) பல ஆய்வுகள் செய்யப்பட்டு அவை நிரூபிக்கப்பட்டு அதுபற்றிய450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதையில் அடங்கியுள்ள தைமோ குவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. அத்தோடு உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்கள்கொழுப்பு அமிலங்கள்விட்டமின்,கரோடின்கால்சியம்இரும்புச் சத்துபொட்டாசியம் என பல சத்துக்களை இது கொண்டுள்ளது. மனித உடலில் தோன்றும் சுமார் 40 வகையான நோய்களுக்கு இதில் நிவாரணம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  அவை பற்றி மேலோட்டமாகப் பார்ப்போம்.

இன்று நாம் உட்கொள்ளும் உணவுபாணங்களிலும் சுவாகிக்கும்போதும் பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறி பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன. கருஞ்சீரகத்தில் உள்ள MRSA (Methicillin resistant Staphylococcus aurous) எனப்படும் ஒருவகைப் பொருள் அவ்வாறான இரசாயனத் தாக்கங்களிலிருந்து மனிதனைக் குணப்படுகித்துகின்றன.

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு உதா¬ரணமாக சளி¬யுடன் சம்¬பந்¬தப்¬பட்ட சக¬¬வி¬¬மான நோய்களுக்கும்) கருஞ்சீரகம் அருமருந்தாகக் காணப்படுகின்றது. உதாரணத்திற்கு பீனிசம் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் நோய்குணங்குறியான தும்மல்மூக்கில் இருந்து நீர் வடிதல்தலை வலிமுன் நெற்றிப்பகுதி பாரம் போன்ற நோய்களுக்கு கருஞ்சீரக எண்ணெய்யில்  3 அல்லது 5 துளி ஒரு மூக்குத் துவாரத்தினூடாக காலையில் எழுந்தவுடனும் இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் இட்டு வருவதுடன் நெற்றிப்பகுதியிலும்உச்சந் தலையிலும் கருஞ்சீரக எண்ணெயினைத் தொடர்ந்து இட்டு அல்லது தேய்த்து வந்தால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் 2-3 கிழமையில் சலியுடன் தொடர்பான சகல நோய்களும் குணமடைய வாய்ப்புண்டு.



இதோடு தொடர்பான பின்வரும் சப்வத்தை படித்துப் பாருங்கள். காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில்ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; “சாமைத் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், “சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “மரணம்” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)

இதுவல்லாத இன்னும் பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாக கருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக Greenmedinfoஎன்ற இணையத்தளத்தில் உள்ள சில தகவல்களை இங்கே தொகுத்துத் தமிழில் தருகின்றேன்.

• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

• சலியால் ஏற்படும் கபம்குளிர் காய்ச்சல்குறட்டை,மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

• கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்க் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

• கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.

• 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.

• கருஞ்சீரகத்தைக் காடி (vinegar) வினாகிரியுடன் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலி நின்றுபோகும்.




• கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.

• வெள்ளைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் கலந்து சாப்பிட்டால் உடலிலிருந்து நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.

• கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

• கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

• நாய்க்கடிபிரசவ இரத்தப் போக்குத் தடங்கல்கர்ப்பபை வலிசிரங்குகண்வலிபோன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

• தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.

• பாலூட்டும் தாய்மார் கருஞ்சீரகம் உண்பதால் பால் சுரப்பைக் கூட்டும்.

• சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

• கருஞ்சீரகத்தை நீருடன் அரைத்து நல்லெண்ணையில் கலந்து சிரங்குசொறிதேமல் உள்ள இடங்களில் பூசி வர குணம் தெரியும்.

• கருஞ்சீரகத் தூள்கொத்தமல்லித் தூள் இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட்டால் அல்லது கருங்சீரகத் துளை தயிரில் கலந்து  சாப்பிட்டால் அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி குறையும்.

• கருஞ்சீரகத்தை தேன் பானியில் ஊரப்போட்டு அதிகாலை வெறும் வயிற்றுடன் சாப்பிட்டால் ஞாபக சக்தி கூடும்.

• கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.

• சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம் (pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.

• தலை முடி கொட்டுதல்இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்துவருவதால் இதனைத் தடுக்கமுடியும்.

கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்ற நபியவர்களது பொன்மொழி இன்று மருத்துவர்களால் கருஞ்சீரகம் தொடர்பாக கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு 1400 வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டதாகும். ஒரு வார்த்தையில் நபியரவர்கள் கூறிய விடயத்தில் எத்துனை எத்துனை மருந்துகள் இருக்கின்றன என்று பாருங்கள். மேலே உதாரணத்திற்காக நான் தொகுத்துத் தந்தவை சொற்பமே! இதுவல்லாத இன்னும் பல நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் நிவாரணி இருக்கின்றது.



மேற்கண்ட நபிமொழிக்கு ஃபத்ஹுல்பாரிஉம்தத்துல் காரீஅல்மின்ஹாஜ் போன்ற நூல்களில் விளக்கவுரைகளைப் பார்த்தால் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை இன்னும் விரிவாக ஆசிரியர்கள் அனுபவ வாயிலாக எழுதிய விடயங்களையும் பார்க்கலாம். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை வரலாற்று நெடுகிலும் பயன்படுத்தப்பட்டுள்ளவொன்று. அதனை மறுக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது. அது இறை அத்தாட்கிகளிலும் ஒன்றுதான்…


என் இனிய இஸ்லாம்..

[‬: அர்ஷின்_நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்…?
மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது.
1. நீதமிகு தலைவர்
2. அல்லாஹ்வை வணங்கியே தனது இளமையை கழித்த வாலிபர்
3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்று கூறி மறுத்த மனிதன்.
6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.
7. தனிமையில் இறையச்சத்தின் காரணமாக அழும் மனிதன்.
அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி)நூல்: புகாரி – 6806
”யா அல்லாஹ்! உனது அர்ஷின் நிழலைப் பெறுகின்ற கூட்டத்தில் எங்களையும் சேர்த்தருள்வாயாக !”

[ ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே…
1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 

திங்கட்கழமை, 

ரபீஉல்அவ்வல்

பிறை 12
2. பிறந்த இடம் : மக்கா
3. பெற்றோர் : 

அப்துல்லாஹ்.

அன்னை ஆமீனா.
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : 

நபி (ஸல்)அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : 

நபி (ஸல்)அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் : 

நபி (ஸல்)அவர்களின் எட்டு வயதில்
8. வளர்ப்பு : 

பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்
9. செவிலித் தாய்மார்கள் : 

ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு 

ஹள்ரத் ஹலிமா (ரளி)அவர்கள்
10. பட்டப் பெயர்கள் : 

அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக்(உண்மையானவர்)
11. முதல் வணிகம் :

அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம்
12. முதல் திருமணம் :

அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன்
13. மஹர் தொகை : 

500 திர்ஹங்கள்
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :

அபூதாலிப் அவர்கள்
15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் :

அன்னை கதீஜா (ரளி),

அன்னை ஸவ்தா (ரளி),

அன்னை ஆயிஷா (ரளி),

அன்னை ஹஃப்ஸா (ரளி),

அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி),

அன்னை உம்முஸல்மா (ரளி),

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி),

அன்னை ஜுவைரிய்யா (ரளி),

அன்னை உம்மு ஹபீபா (ரளி),

அன்னை ஸஃபிய்யா (ரளி),

அன்னை மைமூனா (ரளி),

அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி)
16. ஆண் மக்கள் : 

காஸிம் (ரளி),

அப்துல்லாஹ் (ரளி), 

இப்றாஹீம் (ரளி)

இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள்
17. பெண் மக்கள் : 

ஜைனப் (ரளி),

ருகையா (ரளி), 

உம்முகுல்தூம் (ரளி),

ஃபாத்திமா (ரளி)
18. பேரர்கள் : 

அலீ (ரளி),

உமாமா (ரளி), 

முஹ்சின் (ரளி), 

ஹசன்(ரளி) 

ஹுசைன் (ரளி)
19. ஊழியர்கள் : 

பிலால் (ரளி), 

அனஸ்(ரளி), 

உம்மு அய்மன் மாரியா (ரளி)
20. அடிமை :

ஜைதிப்னு ஹாரிதா (ரளி)
21. பெருமானார் (ஸல்) அவர்களின்தகப்பனார் உடன் பிறந்தோர் : 

மொத்தம்12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத்ஹம்ஜா (ரளி),

ஹள்ரத் அப்பாஸ் (ரளி)
22. பெருமானார் (ஸல்) அவர்களின்தாய் உடன் பிறந்தோர் :

மொத்தம் 6பேர். அவர்களில்இஸ்லாத்தை ஏற்றவர்கள்

ஹள்ரத்அம்மாரா (ரளி),

ஹள்ரத்ஆத்திகா (ரளி),

ஹள்ரத்ஸஃபிய்யா (ரளி)
23. நபிப் பட்டம் கிடைத்தது : 

40 – ம்வயதில் (கி.பி. 610)
24. நபிப் பட்டம் கிடைத்த இடம் :

ஹிரா குகை
25. முதல் வஹீ : 

‘இக்ரஃ பிஸ்மி’ என்ற வசனம்
26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : 

பெண்களில் – ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), 

சிறுவர்களில் -ஹள்ரத் அலீ (ரளி),

ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி),

அடிமைகளில் – ஹள்ரத் பிலால் (ரளி)
27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :

அபிசினியாவிற்கு, 

நபித்துவம் 5 – ம்ஆண்டில், 

மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்
28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் :

நபி (ஸல்) அவர்களின் மகள்

ருகையா (ரளி), 

மருமகன் ஹள்ரத்உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11பேர், பெண்கள் 4 பேர்
29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் :

நபித்துவ 10 – ம் ஆண்டில்,துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி)
30. மக்காவில் தீனழைப்பு:

13ஆண்டுகள்
31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் :

நபித்துவ14 – ம் ஆண்டில்
32. உடன் சென்றவர் :

ஹள்ரத்அபூபக்கர் (ரளி)
33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : 

தௌர்
34. மதீனா சேர்ந்த நாள் :

ஈஸவி 25-09-622 – ல்
35. பத்ரு யுத்தம் : 

ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்
36.தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது :

ஹிஜ்ரி – 2 ல்
37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது :

ஹிஜ்ரி – 2 ல்
38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி – 3 ல்
39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி – 5 ல்
40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி – 6 ல்
41. மது ஹராமாக்கப்பட்டது :

ஹிஜ்ரி – 6 ல்
42. நபி (ஸல்) அவர்களின் புனித பல்ஷஹிதான யுத்தம் : 

உஹது யுத்தம்.
43. நபி (ஸல்) அவர்களின்காலத்து போர்களில் சில :

பனூ முஸ்தலிக், 

ஹுனைன், தாயிப்,

பனூ கைனூக், 

பனூ நஸீர்,

பனூ குறைளா, 

கைபர், 

மூத்தா, 

தபூக்யுத்தங்கள்
44. மக்கா மீது படையெடுப்பு :

ஹிஜ்ரி – 8 ல்
45. மிஃராஜ் : 

நபித்துவ 12 – ம்ஆண்டில், 

ரஜப் பிறை 27 திங்கட்கிழமை
46. தொழுகை கடமையாக்கப்பட்டது :

மிஃராஜில்
47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி – 9 ல்
48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்செய்தது : 

ஹிஜ்ரி – 10
49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்தமொத்த நரை முடிகள் : 

17
50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : 

ஹஜ்ஜத்துல் விதாவில்
51. இறுதி வஹி : 110 – ம்அத்தியாயம்
52. நபி (ஸல்) அவர்கள் உலகை பிரிந்த நாள் : 

ஹிஜ்ரி 10, 

ரபீஉல்அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை
53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்டகிணறு : 

அரீஸ் கிணறு
54. நீராட்டியவர்கள் :

ஹள்ரத் அலீ (ரளி),

ஹள்ரத் அப்பாஸ் (ரளி),

ஹள்ரத்பழ்ல் (ரளி),

ஹள்ரத் குஸீ (ரளி),

ஹள்ரத் உஸாமா (ரளி),

ஹள்ரத் ஷக்ரான் (ரளி),

ஹள்ரத் உஸ்இப்னு கௌல்….!!!!
அஸ்ஸலாமு அலைக்கும்   (வரஹ்)

ஏதும் தவறாக இருந்தால் சுட்டி காட்டவும்

[*ஒவ்வொரு மனிதனும் அவன் மரணித்த நிலையிலேயே  எழுப்பபடுவான்.*
-நபிகள் நாயகம். 
செருப்பு வாரை விட மரணம் மனிதனுக்கு மிக நெருக்கமானது.
விபச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போதே மரணம் தழுவி விட்டால் ?
மது அருந்துதிக்கொண்டு இருக்கும் போதே மரணம் நேர்ந்து விட்டால் ? 
உருகி உருகி இசையும், பாடலும், அசிங்கமான வரிகளையும் செவி ஏற்க்கும் போது மரணம் திடுக்கிட்டால் ?
ஆபாச படங்களையும்  பிறரின் அந்தரங்களையும்  பார்த்துக்கொண்டு இருக்கும் போது மரணம் சூழ்ந்துக்கொண்டால் ? 
மரணம் எப்படி வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் நம்மை கவ்வுக்கிக்கொள்ளும், அந்தளவிற்கு நம்மை தொடர்ந்துக்கொண்டே வருகிறது. 
ஆனால் அச்சமற்று இருக்கின்றோம். பாரமுகமாய் பாவங்களின் ஊடே மன்னிப்பு கேட்டால் தப்பி விடுவோம் என எண்ணிக்கொண்டு இருக்கின்றோம். 
அவ்வளவு சமீபத்து இருக்கும்  மரணம் குறித்து பேச்சுக்கள் மட்டும் மிக அச்சத்துடன் அல்லது மரணமே இல்லாத நித்திய வாழ்வு வாழ்வது போல அதை குறித்து பேசாமல் கடந்தும் மறந்தும் செல்கிறோம்.  
மீறி சிலர் பேசினாலும் என்ன இது அபசகுணமா மரணம் அது இதுனு முதல்ல வாயை மூடு என அதை பற்றி பேசாமல் தவிர்க்க பார்க்கின்றோம்.
மரணத்தை கண் கூடாய் பார்த்தும் தினம் அதை கடந்தும் வருகின்றோம் ஆனால் எந்த நொடியும் நம்மை மரணம் பிடித்துக்கொள்ளும் என்பதை மட்டும் தான் ஏற்க்க மறுக்கின்றோம்.
மரணத்தை பற்றி அதிகம் பேசுங்கள் அதை அதிகம் நினைவூ கூறுங்கள் தவறுகள் செய்ய மனம் அச்சப்படும். 
உயிருடன் இருக்கும் வரை தான் சந்தர்ப்பம், மரணம் ஆட்க்கொண்டு விட்டால் கை சேதப்பட்டு தான் போவோம்.
நபிகள் நாயகம் தன் மகளிடம் கூறுகிறார், ஃபாத்திமாவே என்னிடம் எவ்வளவு செல்வம் உலகில் உள்ளதோ அதை எல்லாம் கேள் தருகிறேன்.
ஆனால் பரிந்துரை ஏற்க்கப்படாத  மறுமையில் என்னிடம் எதையும் எதிர்ப்பார்க்காதே கை சேதப்பட்டு போய் விடாதே ஏகனை தொழுதுக்கொள்  என்கிறார். 
மரண தருவாயில் இருக்கும் போது ஆயிஷா ரலி அவர்களை கூப்பிட்டு அபுபக்கர் ரலி அவர்கள் பேசுகிறார்கள்.
நான் மரணித்தால் என்னுடைய இதே  ஆடையில் கஃபனிட்டு விடுங்கள் என்கிறார்.
அதற்கு அன்னை ஆயிஷா ரலி அவர்கள் இதில்  குங்கும கரை உள்ளது உங்களுக்கு புத்தாடை அணிவிக்கலாம் என்கிறார்கள்.
வாழ்கிறவனுக்கு தான் புத்தாடை தேவை மரணித்த பின் மட்கி போகும் உடலுக்கு எதற்கு புத்தாடை அதை வாழ்கிறவனுக்கு அளித்து விடு என்கிறார் அபூபக்கர் ரலி.
மரணத்தின் பேச்சுக்கள் தவிர்க்கும் குடும்பங்கள் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் அன்னை ஆயிஷா ரலியும் அவரின் தந்தை அபூபக்கர் ரலியும் போல்  எங்கேனும் மரணம் குறித்த  ஆலோசனையிலும் அதற்கு தயார் ஆகும் நிலை குறித்தும் பேசி இருப்போமா? 
அவர்களுக்காவது சந்தர்ப்பம் இருந்தது பேச ஆனால் நமக்கு பேச கூட சந்தர்ப்பம் அமைகிறதோ இல்லையோ அதற்கு நாம் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் சிறந்த வழி.
பாவங்களிலிருந்து ஒதுங்கி நன்மையின் பக்கம் நிற்ப்போம். 
இன்ஷா அல்லாஹ்.
*“அவனே (இறைவனே) மரணத்தையும் வாழ்வையும் உண்டாக்கினான்;*
*உங்களில் யார் மிகச் சிறந்த செயல் செய்கிறார்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே”*
-அல்குர்ஆன் 67:2

[“எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது “இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?“ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் “உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை“ என்று பேசிவிடுவாள்“ என்றார்கள்“ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.*_

_ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை_

[ *மீண்டும் ஓர் வாய்ப்பு*
*ஜும்மா நினைவூட்டல்*
ஒரே நாளில் நன்மைகளை மலையளவு குவிக்க மீண்டும் ஓர் அறிய வாய்ப்பு..
நினைத்து பார்க்க முடியாத நன்மைகளை அல்லாஹ் அள்ளி வழங்குகிறான்..
5 நிபந்தனைகள் மட்டுமே..
👇👇👇
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் *ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி* உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி),
நூல் : நஸயீ 1381
*மேலே உள்ள ஹதீஸின் முக்கிய நிபந்தனை பள்ளிக்கு நடந்து வர வேண்டும். ஆகவே வாகனத்தை தவிர்த்து விட்டு நடந்து செல்லுங்கள்..*

[✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்* ….!!!¡¡¡
                1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை 

அறிந்த மனிதர்கள், 

கவலைப்படாமல்,

தன் கடமைகளச்

செய்யாமல்

*சிரித்துக் கொண்டிருப்பது* ஆச்சரியம்…!!!
                2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*

*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்…!!!
              3. எந்த ஒரு செயலும்

*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன், 

கைநழுவிச் சென்றவற்றை 

எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்…!!!
               4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை 

நம்புகின்ற மனிதன், 

அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்…!!!
              5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன், 

அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்…!!!
               6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை* 

நிறை வேற்றுவது ஆச்சரியம்…!!!
                 7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது

*ஆச்சரியம்*..!!!!!!!”

[ *40 Haadees*

💠 اِنّما الاَعْمَالُ بِالنّیَّات

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக்கொண்டே கூலி வழங்கப்படும்.

💠 اَلصّلٰوة نُورُ المُومِنِ

தொழுகை விசுவாசியின் ஒளி.

💠 اَلصّیَامُ جُنّةٌ

நோன்பு பாதுகாகககும் கேடயமாகும்.

💠 اِنّ الدِّینَ یُسْر

நிச்சயமாக (இஸ்லாமிய)மார்க்கம் இலேசானதாகும்.

💠 اَلدِّینُ النَّصِيحَةُ

(இஸ்லாமிய) மார்க்கம் ஓர் உபதேசமாகும்.

💠 اَلعَینُ حَقٌّ

கண் திருஷ்ட்டி உண்மையாகும்.

💠 طَلَبُ العِلمِ فَرِيضَةٌ علیٰ کُلِّ مُسلِمٍ

கல்வியை கற்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமை.

💠 خَیرُ الحَدِیثِ کِتَابُ اللّٰہِ

பேச்சில் சிறந்தது குர்ஆன் ஆகும்.

💠 وَ خَیرُ الھَدیِ ھَدیُ مُحَّمدٍ صلی اللّٰہ علیہ وسلم

வழிகளில் சிறந்தது நபி வழியாகும்.

💠 اَلحَیَاءُ مِنَ الاِیمانِ

வெட்க்கம் ஈமானில் ஒரு பகுதி.

💠 اَلعَجلَةُ مِنَ الشَّيطَان

جلد بازی شیطان کا کام ھے

அவசரம் ஷைத்தானின் குணம்.

💠 اَلبِرُّ حُسنُ الخُلقِ

நண்மை என்பது நற்குணத்தின் மறு பெயர்

💠 اَلطّھور شَطرُ الاِیمَانِ

சுத்தம் ஈமானில் ஒரு பகுதி.

💠 مَن صَمَتَ نَجَا

மௌனம் காத்தவன் வெற்றி பெறுவான்.

💠 لا تَسُبُّوا الاموَات

இறந்தவர்களை ஏசாதீர்கள்.

💠 لاَ تَسئَلُونَ النَّاسَ شَیئاً

மனிதர்களிடம் யாசிக்காதீர்கள்.

💠 سَمِّ اللّٰہ وَ کُل بِیَمِینِک

பிஸ்மில்லாஹ் கூறி வலது கையினால் சாப்பிடு!

💠 کُل مِمَّا یَلِیک

பாத்திரத்தில் உனக்கு நெருக்கத்தில் உள்ள உணவை சாப்பிடு!

💠 لاَ یَشرِبَنَّ اَحَدٌ مِنکُم قَائِماً

நின்று கொண்டு நீர் அருந்தாதே!

💠 اَلسِّوَاکُ مَطهَرةٌ لِلفَم وِ مَرضَاةٌ لِلرّبِّ

பல் தேய்ப்பது வாயை சுத்தப்படுத்தும், வல்ல அல்லாஹ்வை திருப்தி படுத்தும்.

💠 اَلسَّلامُ قَبلَ الکَلام

பேசுவதற்கு ஸலாம் கூற வேண்டும்.

💠 اَفشُوا السَلامَ بَینَکُم

உங்களுக்கிடையே ஸலாமைப் பரப்புங்கள்!

💠 كُلُّ مَعرُوفٍ صَدقَة

ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகும்.

💠 اِنَّ اللّٰہ رَفِیقٌ یُحِبُّ الرَّفِق

அல்லாஹ் மென்மையானவன்,மென்மையான அனுகுமுறையையே அவன் விரும்புகிறான்.

💠 لا تُقبَلُ صَلوٰةٌ بِغَيرِطهُور

தூய்மையின்றி தொழுகை இல்லை.

💠 اَحَبُّ البِلادِ اِلیٰ اللّٰہ مَسَاجِدُھَا

ஊரிலேயே அல்லாஹ்வுக்கு உகப்பான இடம் பள்ளிவாசல்களாகும்.

💠 اَبغَضُ البِلادِ اِلی اللّٰہ اَسوَاقُھَا

ஊரிலேயே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் கடைத்தெருக்களாகும்.

💠 تُحفَةُ المُومِنِ المَوت

மரணம் முஃமினுக்கு அருளாகும்.

💠 اَنزَلُوا النَّاسَ مَنَازِلَھُم

மனிதர்களுக்கு அவரவர்களின் அந்தஸ்துகளை கொடுங்கள்!

💠 لا یَرحَم اللّٰہُ مَن لا یَرحَم النَّاس

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

💠 لا يَدخُلُ الجَنَّة قاطِعٌ

உறவை துண்டித்தவன் சுவனம் போக மாட்டான்.

💠 لا یَحِلُّ لِمُسلِمٍ اَن یُرَوِّعَ مُسلِماُ

எந்த முஸ்லிமையும் மிரட்டக்கூடாது.

💠 لا تَحقِرَنَّ شَیئاً مِّنَ المَعرُوف

எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ணக்கூடாது.

💠 بَلِّغُوا عَنِّی و لو آیہ

என் மூலம் ஒரு உபதேசம் கிடைத்தாலும் அதனை பிறருக்கு கூறிவிடுங்கள்!

💠 لا اِیمَانَ لِمَن لا اَمَانَةَ لَه

அமானிதம் காக்கும் தன்மை இல்லையெனில் அவனிடம் ஈமான் இல்லை(என அர்த்தம்).

💠 وَلا دِینَ لِمَن لا عَھدَ لَہ

வாக்கு மீறல் இருந்தால் மார்க்கமே இல்லை.

💠 اَلتّائِبُ مِنَ الذّنبِ کَمَن لا ذنبَ لَہ

பாவங்களை விட்டும்(மீண்டு) தவ்பா செய்தவன் பாவங்களே இல்லாதவனைப் போல,(பரிசுத்தமாகி விடுவான்).

💠 مَن لَم یَشکُرِ النَّاسَ لَم یَشکُر اللّٰہ

மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.

💠 زیِّنُوا القُرآنَ بِاَصوَاتِکُم

உங்கள் குரல்கள் மூலம் குர்ஆனை அலங்காரப் படுத்துங்கள்!.

💠 خَیرُکُم مَن تَعَلَّمَ القُرآن و عَلَّمَہ

உங்களில் மிகச்சிறந்தவர் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர்தான்.

*(சின்ன சின்ன நபி மொழிகள் இவை,இவற்றை நாமும் மனனம் செய்வதோடு நம் பிள்ளைகளையும் மனனம் செய்ய வைக்கலாம்) 

இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

*அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!*