இஸ்லாத்தில் தெரியவேண்டியவை…!

ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

 
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே…
1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 

திங்கட்கழமை, 

ரபீஉல்அவ்வல்

பிறை 12
2. பிறந்த இடம் : மக்கா
3. பெற்றோர் : 

அப்துல்லாஹ்.

அன்னை ஆமீனா.
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : 

நபி (ஸல்)அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : 

நபி (ஸல்)அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் : 

நபி (ஸல்)அவர்களின் எட்டு வயதில்
8. வளர்ப்பு : 

பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்
9. செவிலித் தாய்மார்கள் : 

ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு 

ஹள்ரத் ஹலிமா (ரளி)அவர்கள்
10. பட்டப் பெயர்கள் : 

அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக்(உண்மையானவர்)
11. முதல் வணிகம் :

அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம்
12. முதல் திருமணம் :

அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன்
13. மஹர் தொகை : 

500 திர்ஹங்கள்
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :

அபூதாலிப் அவர்கள்
15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் :

அன்னை கதீஜா (ரளி),

அன்னை ஸவ்தா (ரளி),

அன்னை ஆயிஷா (ரளி),

அன்னை ஹஃப்ஸா (ரளி),

அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி),

அன்னை உம்முஸல்மா (ரளி),

அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி),

அன்னை ஜுவைரிய்யா (ரளி),

அன்னை உம்மு ஹபீபா (ரளி),

அன்னை ஸஃபிய்யா (ரளி),

அன்னை மைமூனா (ரளி),

அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி)
16. ஆண் மக்கள் : 

காஸிம் (ரளி),

அப்துல்லாஹ் (ரளி), 

இப்றாஹீம் (ரளி)

இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள்
17. பெண் மக்கள் : 

ஜைனப் (ரளி),

ருகையா (ரளி), 

உம்முகுல்தூம் (ரளி),

ஃபாத்திமா (ரளி)
18. பேரர்கள் : 

அலீ (ரளி),

உமாமா (ரளி), 

முஹ்சின் (ரளி), 

ஹசன்(ரளி) 

ஹுசைன் (ரளி)
19. ஊழியர்கள் : 

பிலால் (ரளி), 

அனஸ்(ரளி), 

உம்மு அய்மன் மாரியா (ரளி)
20. அடிமை :

ஜைதிப்னு ஹாரிதா (ரளி)
21. பெருமானார் (ஸல்) அவர்களின்தகப்பனார் உடன் பிறந்தோர் : 

மொத்தம்12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத்ஹம்ஜா (ரளி),

ஹள்ரத் அப்பாஸ் (ரளி)
22. பெருமானார் (ஸல்) அவர்களின்தாய் உடன் பிறந்தோர் :

மொத்தம் 6பேர். அவர்களில்இஸ்லாத்தை ஏற்றவர்கள்

ஹள்ரத்அம்மாரா (ரளி),

ஹள்ரத்ஆத்திகா (ரளி),

ஹள்ரத்ஸஃபிய்யா (ரளி)
23. நபிப் பட்டம் கிடைத்தது : 

40 – ம்வயதில் (கி.பி. 610)
24. நபிப் பட்டம் கிடைத்த இடம் :

ஹிரா குகை
25. முதல் வஹீ : 

‘இக்ரஃ பிஸ்மி’ என்ற வசனம்
26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : 

பெண்களில் – ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), 

சிறுவர்களில் -ஹள்ரத் அலீ (ரளி),

ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி),

அடிமைகளில் – ஹள்ரத் பிலால் (ரளி)
27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :

அபிசினியாவிற்கு, 

நபித்துவம் 5 – ம்ஆண்டில், 

மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்
28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் :

நபி (ஸல்) அவர்களின் மகள்

ருகையா (ரளி), 

மருமகன் ஹள்ரத்உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11பேர், பெண்கள் 4 பேர்
29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் :

நபித்துவ 10 – ம் ஆண்டில்,துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி)
30. மக்காவில் தீனழைப்பு:

13ஆண்டுகள்
31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் :

நபித்துவ14 – ம் ஆண்டில்
32. உடன் சென்றவர் :

ஹள்ரத்அபூபக்கர் (ரளி)
33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : 

தௌர்
34. மதீனா சேர்ந்த நாள் :

ஈஸவி 25-09-622 – ல்
35. பத்ரு யுத்தம் : 

ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்
36.தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது :

ஹிஜ்ரி – 2 ல்
37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது :

ஹிஜ்ரி – 2 ல்
38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி – 3 ல்
39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி – 5 ல்
40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி – 6 ல்
41. மது ஹராமாக்கப்பட்டது :

ஹிஜ்ரி – 6 ல்
42. நபி (ஸல்) அவர்களின் புனித பல்ஷஹிதான யுத்தம் : 

உஹது யுத்தம்.
43. நபி (ஸல்) அவர்களின்காலத்து போர்களில் சில :

பனூ முஸ்தலிக், 

ஹுனைன், தாயிப்,

பனூ கைனூக், 

பனூ நஸீர்,

பனூ குறைளா, 

கைபர், 

மூத்தா, 

தபூக்யுத்தங்கள்
44. மக்கா மீது படையெடுப்பு :

ஹிஜ்ரி – 8 ல்
45. மிஃராஜ் : 

நபித்துவ 12 – ம்ஆண்டில், 

ரஜப் பிறை 27 திங்கட்கிழமை
46. தொழுகை கடமையாக்கப்பட்டது :

மிஃராஜில்
47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி – 9 ல்
48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்செய்தது : 

ஹிஜ்ரி – 10
49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்தமொத்த நரை முடிகள் : 

17
50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : 

ஹஜ்ஜத்துல் விதாவில்
51. இறுதி வஹி : 110 – ம்அத்தியாயம்
52. நபி (ஸல்) அவர்கள் உலகை பிரிந்த நாள் : 

ஹிஜ்ரி 10, 

ரபீஉல்அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை
53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்டகிணறு : 

அரீஸ் கிணறு
54. நீராட்டியவர்கள் :

ஹள்ரத் அலீ (ரளி),

ஹள்ரத் அப்பாஸ் (ரளி),

ஹள்ரத்பழ்ல் (ரளி),

ஹள்ரத் குஸீ (ரளி),

ஹள்ரத் உஸாமா (ரளி),

ஹள்ரத் ஷக்ரான் (ரளி),

ஹள்ரத் உஸ்இப்னு கௌல்….!!!!
அஸ்ஸலாமு அலைக்கும்   (வரஹ்)

ஏதும் தவறாக இருந்தால் சுட்டி காட்டவும்

திருகுர்ஆனின் வசனம் எத்தனை.6666,

🔴 திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) – எத்தனை ?

⚫ 6666

🔴 தும்மினால் என்ன சொல்ல வேண்டும் ?

⚫ அல்ஹம்து லில்லாஹ்.,

🔴 வஹீ என்றால் என்ன வென்று ?

⚫ அல்லாஹ்வின் செய்தி.

🔴வஹீ கொண்டு வரும் வானவர் யார் ?

⚫ஜிப்ரயீல் (அலை)

🔴 இஸ்திக்பார் என்றால் என்ன ?

⚫ பாவமன்னிப்பு தேடுவது.

🔴 முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார் ?

⚫ பிலால் (ரலி)

🔴 முதல் கலீபா யார் ?

⚫ அபூ பக்கர் சித்தீக் (ரலி)

🔴 மன்னிக்கப்படாத பாவம் எது ?

⚫ குப்ர் – இறைமறுப்பு, ஷிர்க் – அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

🔴 கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார் ?

⚫ நபி மூஸா (அலை)

🔴 எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும் ?

⚫ குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

🔴 அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது ?

⚫ பள்ளிவாசல்

🔴 யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது ?

⚫ தாயின் காலின் கீழ்.

🔴பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது? ⚫ 7 வயது.

🔴பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும் ?

⚫ ஃபீ அமானில்லாஹ்

🔴நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன ?

⚫ கிராமன் காதிபீன்.

🔴 பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது ?

⚫ எகிப்து (மிஸ்ர்)

🔴 இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது ?

⚫ நபி, ரசூல்

🔴 இஸ்லாம் என்பதின் பொருள் என்ன ?

⚫ அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

🔴 உலகம் முழுவதையும் படைத்தது யார் ?

⚫ அல்லாஹ்.

🔴 அஸ்ஸலாத் என்றால் என்ன ?

⚫ தொழுகை

🔴 திருக்குர்ஆன் எந்த மொழியில் உள்ளது ?

⚫ அரபி மொழியில்.

🔴 அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன ?

⚫ அளவற்ற அருளாளன்.

🔴 திருக்குர்ஆனின் முதல் ஸூரா எது ?

⚫ ஸூரா அல் பாத்திஹா

🔴 முஸ்லிமின் முதல் கடமை என்ன?

⚫ தொழுகை.

🔴 மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது ?

கஃபா.

🔴அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது ?

⚫ நரகம்.

🔴 பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர் ?

⚫ 313 ஸஹாபாக்கள்

🔴ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன ?

⚫ நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

🔴 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?

⚫ ஒன்று

🔴 நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார் ?

⚫ நபி சுலைமான் (அலை)

🔴நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் ?

⚫ஏழுபேர். 3ஆண்கள் , 4 பெண்கள்.

🔴 ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார் ?

⚫அபூ ஹுரைரா (ரலி)

🔴அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) அவர்களின் மனைவி யார் ?

⚫ அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா

🔴 திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத ஸூரா எது ?

⚫ ஸூரா தவ்பா.

🔴முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?

⚫கதீஜா (ரலி)

🔴 திக்ருகளில் சிறந்தது எது ?

⚫ லாஇலாஹ இல்லல்லாஹ்

🔴 சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?

⚫ அலி (ரலி)

🔴 நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார் ?

⚫அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

🔴 ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள் ?

⚫ 2 ரக்அத்கள். பர்லு

🔴 நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர் ?

தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

🔴 நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும் ?

⚫ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

🔴 நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?

⚫ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

🔴இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?

⚫ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

🔴 முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது ?

⚫ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

🔴 சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது ?

⚫ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

🔴 எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை ?

⚫ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

🔴நபி (ஸல்) காலத்தில் தன்னை ‘நபி’ என்று சொன்ன பொய்யன் யார் ?

⚫முஸைலமதுல் கத்தாப்.

🔴 ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது ?

⚫ ஸஹீஹுல் புகாரி.

🔴 உண்மையான வீரன் யார்?

⚫ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்

கொள்பவன்.

🔴 நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.

⚫ 63 ஆண்டுகள்.
*உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்* 
🔴அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்யுங்கள்.  (04:36)
*🔴 தாய் தந்தையரை “சீ” என்று கூறாதீர்கள்*. (17:24)
🔴நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மோசம் செய்து விடாதீர்கள். (08:27)
🔴அளவுகளிலும், எடைகளிலும் மோசம் செய்து விடாதீர்கள். (06:152)
🔴மதுவும், சூதாட்டமும் தீமையானது, அதில் பெரும் பாவம் இருக்கிறது. (05:91)
🔴பெண்களின் சொத்தின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். (04:07)
🔴மனிதர்களுக்கு இடையிலான குற்றங்களை மன்னித்து விடுங்கள். அவ்வாறு மன்னிப்பதால் உங்கள் குற்றங்களை இறைவன் மன்னிப்பான். (64:14)
🔴விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.அதுமானக்கேடான செயலாகும்.மேலும் வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லக் கூடியதாகும். (17:32)
🔴குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும் . (02:191)
🔴வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்ககை தேவைகளை) அளிக்கிறோம்.(17:31)
🔴இறைவன் மீது பிரியம் உள்ளவர்கள் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கிறார்கள். (76:08)
🔴நீதியை கடைபிடியுங்கள், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே!  (நீங்கங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரியே! (04:135)
🔴எவன் ஒருவன் ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும்  கொலை செய்தவன் போல் ஆவான். (05:32)
 🔴இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டி வாங்கி உண்ணாதீர்கள். (03:130)
🔴அல்லாஹ்வின் இறுதி தூதர் (முகம்மது நபி)PBUH யிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகgிய  முன்மாதிரி இருக்கிறது.(33:21)

📖படியுஙகள்!!!  📨பரப்புங்கள்!!! இன்ஷா அல்லாஹ்!!!

இஸ்லாத்தில் நேற்று இன்று நாளை….!?

ஹிஜாப் என்ற பேரில் சீரழியும் நவீன கால  பெண்கள் 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
குர்ஆன் ஹதிஸ் சொல்லும் அன்றைய கால ஸஹாபி பெண்களின் ஆடைகள் 
.     ‘(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும்  அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.’ – அல்குர்ஆன் 24:31
இங்கு ‘வெளியே தெரிவன’ என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்
‘அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது’ என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.
2.    ‘இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.’ (முஸ்லிம்)
3.    பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1653)
4.    ‘ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.’ (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.’ (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)
ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாக ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது, பெண்கள் அதிகமாக அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அதை ஆண்கள் அணியக் கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.
5.    ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது. வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை.
6.    ‘அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்’ எனக் கூறுகிறது அல்குர்ஆன்.
அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷூக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை குர்ஆன்

கூறுகிறது
பர்தா -ஹிஜாப் எப்படி இருக்க வேண்டும்  இஸ்லாமிய பார்வை
ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
அல்லாஹ் கூறுகிறான்: ‘(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்:24:31)
”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்:33:53)
இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல்வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்றவற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.
மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,
‘அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.'(அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ
இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!’ (அல்குர்ஆன்: 33:59)
‘நாங்கள் நபி(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்’ என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
‘பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்’ என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)
”ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)
அதில் ஒரு அமசம்தான் ஹிஜாப் அணிவது. இது இஸ்லாம் பெண்களுக்கென வழங்கிய ஓர் சுதந்திரமான சட்டமாகும். அறைகுறை துணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொறுகிக் கொண்டு, இதுதான் சதந்திரம் என்று நடமாடும் மானம் கெட்ட அநாகரீக கூப்பாடிகளுக்கு மத்தியில், வலைத் தளங்களிடையே ஹிஜாப் ஓர் விமர்சன அம்சமாக நோக்கப் படுவதை பார்க்கிறோம்
மூன்று பெண்கள் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள் என 

நபி ஸல் கூறினார்கள்

ஆடையை 

இறுக்கமாக 

மெல்லியதாக

அலங்காரமாக 

அணிபவள் 
நபியவர்கள் கூறினார்கள், ‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)
குறைந்துவிட்ட ஆடை:

இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் “ஈவ்டீசிங்” என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.
ஒருவர் தனது அருகில் நின்றவரிடம் “அந்தப் பையனைப் பாருங்க! ரொம்ப நேரமா இங்கேயே நின்னுக்கிட்டுருக்கான்” என்றார். உடனே அவர் அது பையனில்லை. என் பொண்ணு” என்று கோபமாக கூறினார். இவர் “ஸாரி மிஸ்டர்! எனக்குத் தெரியாது” என்று கூற அதற்கு அவர் “மிஸ்டரா? ஐயோ நான் அதோட அப்பா இல்ல. அம்மா” என்றாராம். இப்படித்தான் இன்று யாரைப் பார்த்தாலும் ஆண்களின் உடையை பெண்கள் அணிந்து கொள்வதும் முகத்தை முற்றிலும் வழித்துக் கொண்டு ஆண்களும் பெண்களைப் போன்றிருப்பதும் அதிகமாகிவிட்டது.

அது மட்டுமின்றி இன்றைய பெண்கள் அலங்காரத்தோடு வெளியே செல்வது பர்தாவைப் பேணாமலிருப்பதும் ஒழுக்க விழுமங்களை கேள்விக்குறியாக்கிவிட்டது. வீட்டை திறந்துவைத்துக் கொண்டு யாரும் திருடர்களை வரவேற்பதில்லை. அதே போன்று மெல்லிய ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிந்து தனது அலங்காரத்தை திறந்து வைத்துக் கொண்டு அந்நியர்களின் தவறான பார்வைகளை பெண்கள் வரவேற்கக் கூடாது
நவின கால ஹிஜாப் என பேரில் வரும் 

இந்த விபச்சாரிகளினஇறுக்கமான  ஆடையை தவிர்த்து இஸ்லாம் சொல்லும் ஹிஜாப் ஆடையை தேர்ந்தெடுப்போம்
தொகுப்பு

அப்னாஸ் அலி 

தலைவர் 

தாரூல் இல்ம் 

சமூக சேவை மையம்